உகந்த கணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுதையா
1.
தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறங்கிவிடும்
முற்றிலும் எரிந்துவிடும்- உகந்த
2.
வேண்டாத பல்வீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே – உகந்த
3.
கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தர் உமைப் பார்க்கணும் என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கெட்கணும் என் – உகந்த
4.
அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும் – உகந்த